அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. யாழ் நரம்பில் பொருந்திய இசை வடிவாகிய ஈஸ்வரியே கருப்பையில் வாசம் செய்து வந்த இந்த உடம்பும் உயிருமானது பிரம்மன் விதித்த நேரத்தில் காலன் வரும் சமயம் நின்னை துதிக்கும் தேவ மகளியர் சூழ நீ வந்து உன் வளையணிந்த திரு கரத்தால் அஞ்சாதே என்று…
