வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
தேர் – குதிரை – மதம் மிக்க யானை பெரிய கிரீடம் பல்லக்கு பிற மன்னர்கள் திரையாக வழங்கும் பொன்
மிக்க விலையுடைய பொன்னாரம் முத்துமாலை போன்றவை
பிறையை திருமுடியில் சூடியுள்ள சிவ பெருமானின் அழகிய பத்தினியாகிய அபிராமியின்
திருவடித்தாமரைக்கு முன் பிறவிகளில் தொண்டு செய்த தவமுடைய அடியார்களுக்கு
உண்டான அடையாளங்கள் ஆகும்.
