நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.
ஈஸ்வரி நான்க முகங்கள் கொண்டவர்
நாராயணி கை தாமரையில் 5 மலரம்புகளை உடையவள்
சம்புவின் மனைவி சங்கரி
சாமளை நஞ்சை வாயிலே உடைய நல்ல
ஜாதி பாம்பை மாலையாக கொண்டவள்
வராகி சூலினி மாதங்கி என்ற நாமம் கொண்ட அபிராமியின் திருவடிகளே
நமக்கு பாதுகாப்பு!
