அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே. ஆதியாக ஒன்றாய் இருந்து பல பல சக்திகளாய் விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றாலும் விலகி நிற்பவளே நீ என் சிந்தையினுள் நிற்பவளே நீ என் சிந்தையினுள் நீங்காமல் நிற்பது வியப்பல்லவோ இதை யார் அறிவார் என் தந்தையாகிய சிவபெருமானும் யோக துயிலில் உள்ள…