நவநாகரீகம் நடத்தும் பொருளாதார போட்டியில் பங்கு பெற
தான் ஊரைவிட்டு நகரம் சென்றான் முதலில் அது பத்தவில்லை
அவனுடைய வேகத்தை அதிகப்படுத்தி நாட்டைவிட்டான். பிறநாடு சென்றான்
அங்கு சொந்த மொழியின் தேவையோ சடங்குகளுக்கோ வேலை இல்லை
அதனால் அதை கழற்றி வீசிவிட்டான்
அதோடு அவனது சொந்தங்கள் கூட கழன்று போயின
தன் ஊரைவிட்டு தன் நாடுவிட்டு தன் மொழிவிட்டு தன் உறவுகள் சொந்தங்கள் விட்டு
இவை அனைத்தும் அவனுக்கு தந்த அற சிந்தனைகளையும் விட்டு
இப்போது ஒத்தையாய் பொருளாதார வெற்றியில் இருக்கும் மனிதனை,
மனிதர்களை என்னவென்று நினைப்பது _சொல்வது.
