எல்லோராலும் யோசிக்க முடியும் யோசித்த எல்லோரும் யோசித்த விஷயத்தில் நிலை _கொண்டு விட்டார்களா என்ற வினா வரும் போது
தெளிவடைந்தவர்களின் சதவிகிதம் மிக குறைவே என்பது தெரிய வரும்
இது ஏன் என்ற வினா வந்தால்
யோசித்தல் தொடர்ச்சியாய் அமையாதது தெரிய வரும்
அப்படி யோசித்தல் தொடர்ச்சியாய் அமைய வேண்டுமென்றால்
நமக்கு ஏதாவது ஒரு நிர்பந்தம் ஏற்பட வேண்டும்
அதை காலம் தான் தர வேண்டும்
அதனாலேயே அதற்கு கால நிர்பந்தம் என்று பெயர்
அந்த கால நிர்பந்தம் ஏற்படும் போது யோசித்தல் தொடர்ச்சியாகும் போது
தெளிவு ஏற்படும் அந்த தெளிவு காலத்திற்கும் நிற்கும்
ஏனென்றால் அது காலம் தந்தது.
