விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 113
ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்?
