தற்காலத்தில் ஆராய்ச்சிக் கருவிகள் மூலம் விளக்கப் படாமல் பல தாறுமாறான எண்ணங்களுக்கு இடமிருந்து வந்தது.
சுவாமி குவலயானந்தர் அவர்கள் இதைக் கைவல்யதாமா ஆசிரமத்தில் பரீட்சித்தார்.
சாதகரின் குடலுக்கும் ஒரு “பாரோ மீட்டரு” க்கும் (BAROMETRE) இணைப்பு செய்தார்.
நெளலி செய்தவுடன் கருவியிலுள்ள பாதரஸம் சடாலென்று கீழிறங்கியது.
இதிலிருந்து இக்காலத்தில் குடலினுள் காற்றிறுக்கம் குறைகிறதென்று விளக்கப்பட்டது.
“பார்ஷியல்” வேகுவம் “(PARTIAL VACUM ) உண்டாகிறதென்று தீர்மானிக்கப்பட்டது.
சுவாமியார், இதற்கு ஸ்ரீ மாதவதாசாவேகுவம் ( SRI MADAVADASA VACUM) எனப் பெயரிட்டார்.
மாதவதாசர் இவருடைய குரு.
