ரிஷிகேசம் 4

நீலகண்டராக சிவலிங்க வடிவத்தில் தியாகராஜர் சிவபெருமான் இத்தலத்தில் வணங்கப்படுகின்றார். ஆடி மாதத்தில் (இவர்களுடைய சிரவண மாதம்) காவடி எடுக்க வரும் லக்ஷக் கணக்கான பக்தர்கள் முதலில் இவருக்கு கங்கை நீரை சமர்பித்த பிறகே தங்கள் ஊர்களுக்கு கங்கை தீர்த்தம் கொண்டு செல்கின்றனர். மாசி மாத மகா சிவராத்திரியின் போதும், ஆடி மாத சிவராத்திரியின் போதும் இங்கு மேளா எனப்படும்  பெருவிழா நடைபெறுகின்றது