அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 74 தொழிலில் மேன்மை அடைய
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையப் பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. மூன்று கண்களை உடைய சிவபெருமானும், வேதமும், திருமாலும், நான்முக கடவுளாகிய பிரம்மனும், புகழ்ந்து பாராட்டுகின்ற அபிராமி தாயின் திருவடிகளையே முக்திக்கு பயனென்ற தியானிப்பவர் தேவ மகளியரின் ஆடல்களுக்கு நடுவில் தங்க கட்டிலில் படுத்து இந்திர லோகத்தில் இந்திரனை போல் இருப்பார்கள்.
