சுந்தர யோக சிகிச்சை முறை 166
பஸ்தி மூலம் இழுக்கப்பட்ட தண்ணீர் உட்டியாணா, மத்யம நெளலி, வாம, தட்சிணநெளலி, நெளலிக் கிரியைகள் மூலமாக சீகம் வரையில் சந்து பொந்துகள் முதலிய எல்லா இடத்திற்கும் சென்று மலத்தைக் கரைக்கின்றது. கீழ்க்குறித்த முறையை நன்கு கவனித்துப் பழகவும். குழாயை வெளியில் இழுத்ததும் தனிப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்துவிடவும். கிரியை தீர்ந்த பிறகு இதை நன்றாக சுத்தம் செய்து துடைத்து, மறு உபயோகத்திற்கு பத்திரம் செய்யவும்.
