சுந்தர யோக சிகிச்சை முறை 164
உட்கார்ந்து நெளலி செய்தவுடன், குழாய் மூலமாக நீர் பெருங்குடலில் ஏறுகிறது. இருபது, முப்பது வினாடிகளுக்குள் போதுமான நீர் உட்சென்று விடும். இத்துடன், பஸ்திக்கிரியை பூர்ணமாகாது. தண்ணீர் இழுக்கும் வழியையே ‘பஸ்தி’ என்று கூறமுடியாது. இதற்கடுத்த படியான விதிகளையும், கைப்பற்றாவிடில் பலன் கிட்டாது. உள்சென்ற நீர் பெருங் குடல் முழுவதம் பரவ வேண்டும் ‘சீகத்’தையும் எட்ட வேண்டும். நீர் வற்றி, உண்டை உருளைகளாய் மலம் காய்ந்து கிடக்கும். இவை நீரில் கரைய வேண்டும். இதற்குப் போதுமான காலம் குடலில்…
