அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 75 விதியை வெல்ல
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திரு மேனி குறித்தவரே பொங்கி எழும் 7 கடல்களும், 14 புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிறையும் வாசனை உள்ள மலர்களை அணிந்த கூந்தலை உடைய தேவியின் திருஉருவத்தை தியானம் செய்யும் அடியார்கள் இந்திர பதவி பெற்று கற்பக மர நிழலில் இருப்பர் பின் இடையுறாது வரும் பிறவியை தரும் தாய்மார்களின்…
