குடலினுள் சென்ற நீரைச் சுமார் இருபது நிமிடங்கள் அங்கேயே நிறுத்தலாம்.
இந்தக் காலத்தை உட்டியாணா, நெளலி முதலியவைகளுக்குச் செலவழிக்க வேண்டும்.
இடையில் இளைப்பாற்றிக் கொள்ளவும்,
சில தடவைகள் உட்டியாணா, பின் மத்ய நெளலி, பின் வாம, தட்சிண நெளலிகள், கடைசியாக நெளலிக்கிரியை என
மாற்றி, மாற்றி ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து கொண்டே இருக்கவும்.
பதினைந்து இருபது நிமிடங்கள் கழிந்த பிறகு மலங்கழிக்கும் இடம் சென்று
எல்லாவற்றையும் வெளியே போக்கவும்.
ஒன்றிரண்டு தடவைகளில் நீர் மலக்குழம்பு கலந்தாலும், முற்றிலும் நீக்குவதற்கு,
மேற்கூறிய கிரியைகளை சில நிமிடங்கள் செய்யவும்.
வெளிவந்து மயூராசனத்தை ( 3 – ம் பாகம் பார்க்க ) செய்து,
எல்லா மலத்தையும் வெளிக்கடத்தவுதவும்.
