அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 72 பிறவிப் பிணி தீர
என்குறை தீரநின் றேத்துகின்றேன், இனி யான் பிறக்கின், நின்குறையே அன்றி யார்குறை காண்? இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய், தன்குறை தீர, எங்கோன்சடை மேல்வைத்த தாமரையே. அகன்று உயர்ந்த வானத்தில் உண்டாகும் மின்னலை குறை சொல்லும் அளவிற்கு அதனினும் மெலிந்த சிறிய இடையையும் மிக மென்மையையும் உடைய தாயே சிவ பெருமான் உன் ஊடல் கண்டு அதை தீர்க்கும் வண்ணம் நின் திருவடி தாமரைகளை தன் தலையில் தாங்கிய வண்ணம் போல் என்…
