அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 70 நுண் கலைகளில் சித்தி பெற
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும்குரல் வீணையும், கையும் பயோதரமும் மண்களிக்கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களில்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே தும்ப வனத்தில் நல்ல பாடல்களால் சந்தோஷ குரலோடு இணைந்த வீணையும் அதனை கொண்ட திருகரமும் தனபாரமும் உலகெல்லாம் தரிசித்து மகிழும் பச்சை நிறமும் மதங்க குல பெண்களில் ஒருத்தியாய் அவதரித்த தேவியின் வடிவழகை என் விழிகள் நிறையும் வண்ணம் கண்டு தரிசித்தேன்.
