சக்கராசனம் — CHAKKARASANAM முதல் முறை — பிறையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தரையில் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்கவேண்டும். இரண்டாவது முறை — தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் காட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆரம்பத்தில் 2 – வது முறையே பழகலாம். பலன்கள் — ஆசனங்களில் மிக முக்கியமானது முதுகுத்தண்டின் வழியாகச் செல்லும் அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்படும் புத்துணர்வு ஏற்படும். இளமை மேலிடும். கூன் முதுகு நிமிரும். தண்டுவடம் பலம் பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். நுரையீரல், சுவாச, உறுப்புகள், பலம் பெறும். வயது முதிர்ந்தாலும் இளமை மேலிடும். Category: யோகாBy admin@powerathmaFebruary 16, 2021Leave a commentTags: CHAKKARASANAMDIVINEPOWER AATHMAA .COMஇளமைஉறுப்புகள்கூன் முதுகுசக்கராசனம்சுவாசநுரையீரல் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 4Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 163April 25, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 162April 24, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 161April 23, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 160April 22, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 159April 21, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 158November 30, 2025