ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18
ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலையை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…
