அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கென் குறையே?
தன் அழகிற்கு ஒப்பில்லாத கொடி போன்ற அபிராமி தாயே
தினமும் வேதங்கள் பயிலுவதனால் சிறந்த திருவடி மலர்களை உடையவள்
குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையை
திருமுடியிலே சூடும் யாமளை எனும்
கற்பக பூக்கொம்பு இருக்கும் போது
எதற்கு வருத்தம் கொள்ளாதே எந்த குறையும் இல்லை.
