மாலயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
பால், தேன், வெல்லப்பாகு போன்று இனிமையாய் பேசும் தேவியே
திருமாலும், பிரம்மனும், வேதமும், தேவர்களும், தேடும் நின் திருவடிகளும்
வளையல் அணிந்த திரு கரங்களையும் தாங்கியபடி
என் முன் நிற்கும் தேவியே காலன் மூன்று கிளைகளை உடைய திரிசூலத்தை
என் மீது விடும் போது காத்து அருள்வாயாக!
