அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.
தாமரை மலரில் இருக்கும் தேவியே உன்னுடைய ஒளியினால்
எல்லா அண்டங்களும் பிரகாசித்து ஒளிர்கின்றது
இந்த நிலையை நான் தியானிக்கும் போது
என்னுடைய அந்த கரணங்கள் அனைத்தும் ஆனந்த மயமாகி
பரவெளியை அடைந்து விடுகிறது
இந்த நிலையை எனக்கு அருளிய உன் கருணையை எப்படி மறப்பேன்.
