அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோ
டிணங்கேன், எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே
தேவ மாதர்களை பரிவார சக்தியாக கொண்டதோயே
உன்னை தவிர நான் யாரையும் வணங்கேன்
போற்றி வாழ்த்தவும் மாட்டேன் நல்லெண்ணமில்லாத மக்களோடு இணையவும் மாட்டேன்
உன்னையே சரணம் கதி என்று இருப்பவர்களோடு நல்ல உறவோடு இருப்பேன்
சிறிதும் எனக்கு அறிவு இல்லாவிட்டாலும்
என் மீது நீ வைத்த கருணை எத்தனை பெரியது.
