குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
பஞ்ச புஷ்ப மாலையாகிய பைரவியே
நீ வண்டுகளினால் தேன் ஒழுகின்ற கொன்றை கண்ணியை
திருமுடியில் அணிந்த சிவ பிரானின் இடபாகத்தில் இருப்பவளே
நின் வடிவை என் மனதில் தியானம் செய்ததன் பயனாக
நின் மன குறிப்பறிந்து என் உயிரை கவர வரும்
யமனின் வழியை அடைத்து விட்டேன்.
