விரவும் புதுமலரிட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.
பல வகையான மலர்களால் அர்ச்சித்து நின்பாத கமலங்களை
இரவும், பகலும் தொழும் அடியார்கள் அனைவரும்
தேவர்களாகவும் இந்திர லோகத்தில் வசிக்கும் உயர்நிலையையும்
ஐராவத யானையையும் ஆகாய கங்கையையும்
வலிமை உடைய வஜ்ராயுதத்தையும் கொண்டு
கற்பக மர நிழலில் சுகமாய் இருப்பார்கள்.
