அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 84 தர்ம சங்கடங்கள் நீங்க
உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச்செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சடை யாளைத், தயங்கு நுண்ணூல் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கென்னை இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. எல்லாவற்றையும் உடைய பரமேஸ்வரியே செம் பட்டை இடையில் அணிந்தவளே! சிவந்த சடையில் பிறையை அணிந்தவளே என்றும் எப்போதும் வஞ்சகர் மனதில் இல்லாதவளை எங்கள் சிவபெருமானின் இட பாகத்தில், உள்ளவளை என்னை மீண்டும் படைக்காமல் இருப்பவளை தரிசித்து தொழுது வணங்கி மீண்டும் பிறவா நிலையை பெற்றுக் கொள்ளுங்கள்.
