அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 85 துன்பங்கள் நீங்க
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும், வார்க் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே. என் துக்கங்களையெல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரியின் திருக்கையில் பாசாங்குசமும் குளிர்ந்த நிலையில் உள்ள வண்டுகள் மொய்க்கும் 5 அம்புகளாகிய புது மலர்களும், கரும்பு வில்லும் அவள் திருமேனியும் சிறிய கச்சை அணிந்த இடையும் குங்கும குழம்பு பூசிய தனங்களும் அந்த தனத்தின் மேல்…
