உரையாடலின் ஒரு பகுதி 151
ஒருவர் இருக்கும் வரை 1 பசியறிந்து சோறுபோட, ஒருவர் இருக்கும் வரை சாப்ட்டாயா என கேட்க, ஒருவர் இருக்கும் வரை தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என கேட்க, ஒருவர் இருக்கும் வரை நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்து பார்த்துக்கொள்ள – ஒருவர் இருக்கும் வரை குரல் மாறுபாட்டில் நம் மனநிலையை கணிக்க – ஒருவர் இருக்கும் வரை போய் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப ஒருவர் இருக்கும் வரை தோற்று போய் திரும்புகையில் தோள் சாய்த்துக்கொள்ள…
