அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 87 செயற்கரிய செய்து புகழ் பெற
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி, என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே. தன் நெற்றி கண்ணால் மன்மதனை எரிக்கும் பரமசிவனின் தவ விரதத்தை உலகம் பழிக்கும் படி குலைத்து அவர் இட பாகத்தை கை கொண்டு ஆட்சி செய்யும் பராபரையே என் சொல்லிற்கும் நினைவுக்கும் எட்டாத உன் திருஉருவமானது அடியேனின் கண்களுக்கும் பூஜை முதலிய செயல்களுக்கு வெளிப்பட்டு நின்றது ஆச்சரியமே!
