குழந்தைகளுக்கு குடும்பத்தோடு ஒரு 15வயது வரையாவது இருக்கும் உரிமையை
இக்கால பொருளாதார வெற்றி பெறல் என்பது மறுத்துவிட்டது.
பெற்ற பிள்ளைகளை ஒரு 10 வயது வரை கூட வைத்து பார்க்காத இந்த சமூகத்திற்கு
இயற்கை மழையையும், காற்றையும் வெப்பத்தையும் சீராக வழங்குமா என்ன?
ஒரு விதத்தில் சொன்னால் மனித குலம் அழிவுக்கான ஒரு வழி பாதையில் வெகு தூரம் பயணித்து விட்டது
இது மாற ஏதாவது ஒரு பெரும் அழிவு மட்டுமே மாற்றக, மருந்தாக, தீர்வாக அமையும்
வேறு என்ன சொல்வது நினைப்பது
முக்கியமான விஷயம்
சொல்வதாலும், நினைப்பதாலும்
எந்த மாற்றமும் உருவாக போவது இல்லை.
