பழ மொழிகள் 16
அகம் குளிர முகம் மலரும். அகப்பை அறுசுவை அறியுமா? அச்சம் ஆண்மையைக் குறைக்கும். அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா? அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.

அகம் குளிர முகம் மலரும். அகப்பை அறுசுவை அறியுமா? அச்சம் ஆண்மையைக் குறைக்கும். அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா? அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்குசென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.
தேப்பெருமாநல்லூர் குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.
நஞ்சன்கூடு கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.
சுருட்டப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.
திருவோத்தூர் காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி
அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும் கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே இந்த அளவிற்கு பெரியவளான நீ இரங்கத்தக்க எளியேனின்…
தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார், மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. இனிய இசையின் ராகங்களை ஒத்த மொழிகளை பேசும் நல்ல வாசனையுடைய மேனியை உடைய யாமளை யாகிய பச்சை கிளியே முன் பிறவிகளில் நின் திருவருளை பெற பலகோடி தவங்களை செய்தவர்கள் இப்பூமியின் உள்ளசெல்வமாகிய அரசு செல்வம் போன்ற இவற்றை மட்டுமா பெறுபவர்கள்…
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே. தேவர்களும் அசுரர்களும் ஆகிய இரு இனத்தினரும் அபிராமி தாயே நின்னை வழிபடுகின்றனர். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை தியானம் செய்பவர் தம் உள்ளத்தின் உள்ளே அன்பினால் பூட்டி வைப்பவர் ஆனந்த உருவினரான சிவபெருமான் இத்தனை இருந்தாலும் பூவுலகில் உன்னை தரிசிப்பவர்க்கு உன் திருவருள் எளிதாக கிட்டுகிறது.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.