ஏதாவது வரம்
ஏதாவது வரம் வேண்டும் என்று. கேட்டு கொண்டே இருக்கிறோம் இறைவனிடம் அவர் தந்த மனிதபிறவியே வரம் தான் என்று உணராமல்…!

ஏதாவது வரம் வேண்டும் என்று. கேட்டு கொண்டே இருக்கிறோம் இறைவனிடம் அவர் தந்த மனிதபிறவியே வரம் தான் என்று உணராமல்…!
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக் கொள்.. அதற்காகவே உன்னை தயார்படுத்து.. அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும் போது உணவருந்துங்கள்.
சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…
சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…
வியான முத்திரை:- ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:_ தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும். தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும். இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும். தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும். கண் எரிச்சல் உள்ளங்கை…
வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும். சிறுநீரக கோளாறுகள் அகலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் ரத்த ஓட்டம் சீராகும் தாகம் குறையும் சதைப்பிடிப்பு நீங்கும் குடல் அழற்சி நீங்கும் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும். அம்மை நோய்…
பிருத்திவி முத்திரை:- மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும். முடிஉதிர்வைப் போக்கும். உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும். சிந்தனைத் தெளிவடையும். ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லை நீங்கும். உடல் வெப்பநிலை சமனடையும்.…
பிணி (நோய்) தடுக்கும் கவசம் எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும், தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது. இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம், இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது. இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது. மேலும் பெரும்பாலோர் வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,…
யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத! யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ. தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்! ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும். இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும். எப்பிணியும் துக்கமே,…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.