இதை உணர்ந்து இருக்கிறீர்களா
ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது

ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது
ஜீன்களை சுமந்து செல்வதே சுக்லதாது . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது . தந்தையிடமிருந்து (father) 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து (grand father) 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து (great grandfather) 10 அம்சங்கள் ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. பாக்கி உள்ள 10 அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை. நான்காவது மூதாதையிடமிருந்து 6…
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.
‘உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, ‘நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்’ என்று சொல்ல உங்களால் முடியவேண்டும். இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான்…
நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.
ஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி ‘ஹிந்து வளர்ச்சி விகிதம்’ என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை ‘நேருவின் வளர்ச்சி விகிதம்’ என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.
சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.’என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தியர்களின் முன்னேற்றம்: அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்
ஜாவஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.