கல்வியின் பயன் 6
இது வரை சொன்னவற்றை தொகுத்தால் கல்வி அறிவை தர வேண்டும் அறிவு ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அன்பு அருளை தரவேண்டும் அருள் துறவை தரவேண்டும் துறவு வீடுபேற்றை தரவேண்டும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உரையில் இருந்து.

இது வரை சொன்னவற்றை தொகுத்தால் கல்வி அறிவை தர வேண்டும் அறிவு ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அன்பு அருளை தரவேண்டும் அருள் துறவை தரவேண்டும் துறவு வீடுபேற்றை தரவேண்டும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உரையில் இருந்து.
இப்போதய கல்வியின் முறை பொருளாதாரத்தைக் பெறுவதற்கு மட்டுமே அடிப்படை உந்து சக்தியாய் இருக்கிறது அந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் குறைவு ஆனால் ஒழுக்கத்திலும் அன்பிலும் இருந்து வாழ்ந்தவர்கள் அதிகம் இந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் மிக, மிக அதிகம் ஆனால் ஒழுக்கத்திலும், அன்பிலும் இருப்பவர்கள் இல்லையென்று சொல்லும் அளவிற்க்கு குறைவு.
நம் முன்னோர்கள் கல்வி என்பது எதை செய்யும் அதை கொண்டு நாம் எதையெல்லாம் செய்யலாம் என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இப்போது நாம் சிந்திக்க வேண்டியது நமது கல்வி முறை நம்மை வீடு பேறு வரை அழைத்துச் செல்லுமா என்று சிந்தித்தால் கேள்விகுறிதான் பதிலாக இருக்கிறது.
அடுத்து ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அடுத்து அன்பு அருளை தரவேண்டும் அடுத்து அருள் துறவை தரவேண்டும், அடுத்து துறவு வீடு பேற்றை தரவேண்டும் இப்படி பார்க்கும் போது சரியான கல்வி நம்மை வீடு பேற்றிற்க்கு அழைத்து செல்லும்
அடுத்து அறிவானது ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கத்தை தராத அறிவு அறிவே அல்ல ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி அறிவு தந்து அந்த அறிவு ஒழுக்கத்தை தரவில்லையென்றால் அந்த கல்வியே தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
கல்வியின் பயன் நம்மை எங்கே அழைத்துச் செல்லுமென்று பார்ப்போமேயானால் அது நம்மை முழுமைக்கு அழைத்து செல்வதை காணலாம். மனிதராக பிறந்த நாம் வீடு பேறு அடைவதே முழுமையாகும். அதற்கு அடித்தளமாய் மூலமாய் இருப்பது கல்வியாகும். கல்வி நமக்கு அறிவை தரவேண்டும். அறிவை தருவதே தரவேண்டியதே சரியான கல்வியாகும்.
ஒருவரின் விலை உயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல்…
உலகில் குறைகள் இருப்பதால்தான் 2 ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில்…
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான். குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.…
சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். ‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார். இரண்டு எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.