சமத்துவ சிந்தனை 3
நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.

நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.
சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது. ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று, எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட தத்துவம் தானே சமத்துவம் என்பது ரொம்ப சரியான தத்துவம் தானே என்று தோன்றினாலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.
சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது. அதிலும் முக்கியமாக அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில் சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும். அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும். அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.
தற்போதய சமுதாய சூழ்நிலையில் அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது காரணம் என்று தேடினால் நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது. விளைவு சரி தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு இல்லாமல் போய்விட்டது அதனால் ஏமாற்றுதல் என்பது வாழ்க்கையின் நியதியாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும் அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, தொழில் என்று எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம். இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து சரி செய்து விட்டால் குடும்பம்…
கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.
எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சியை விட நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.
உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.
எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும். நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் ! நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள். உறுதி காட்டியதில்லை. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள். நான் தலையிட்டுள்ளேன் !! உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்திருக்கிறேன் !! மேற்சொன்ன கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க…
நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம். எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !! உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம். பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !! உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள். நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.