நாம மேல ஏற ஏற
நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!

நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!
கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…
நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும். உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும். பயிற்சியும் சரியாக வராது. நெளலியை நின்றும் செய்யலாம் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம் குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி, தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும். இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.
உட்டியாண வயிற்றின் வீரியத்திற்கு எடுத்ததே. ஆனால் இதைக் காட்டிலும் உயர்ந்த அப்பியாசம் ஒன்றுள்ளது. அதுவே ‘ நெளலி ‘ பழகும் வகைக்கு சென்ற பயிற்ச்சிக்கும் இதற்கும் வித்தியாசம் நன்கு தெரியும். உட்டியாணாவில் வயிறு எங்கேயோ முதுகை நோக்கி ஓடிவிட்டது. நெளலியில் இது உருண்டு திரண்டு தண்டாக, நடுவில் நின்று காட்சி அளிக்கிறது. ஜாலவித்தை ஒன்றுமில்லை. உட்சதைகளின் ஆட்சியால் கிடைக்கும் நிலையே இது இலட்சக்கணக்கான சாதகர்கள் இதை இப்பொழுதும் நம்நாட்டில் பழகி வருகிறார்கள்.
யோக சாதனையில் உட்டியாணா, நெளலி என்ற அபூர்வ அப்பியாசங்கள் உள்ளன. நான்கோரும் பலனைக்கொடுக்க இவைகள் தான் மிகவும் உகந்தவை. உட்டியாணாவை பழகும் வகையைப் படித்த உடனேயே, உட்டியாணாவின் பலன்களை ஊகிக்க முடியும். பழக ஆரம்பித்தால் சந்தேகம் அறவே ஒழியும். அப்பியாசம் சித்திக்கவே, வயிற்றுச் சதைகளின் பலவீனம் பறந்தோடி உழைக்கப்படுகின்றன.
பெருங்குடல் பொருள்கள் வெளித்தள்ளப்படாமல் தேங்குகின்றன. தீவிர மலச்சிக்கல் உண்டா கின்றது. வயிற்றுச் சதைகளின் பலவீனத்தால் இங்கே கெடுதல் ஏற்படுகிறது. விளக்கெண்ணெயும், ‘சால்டு’களும், ‘எனிமா’வும் ஒரு பலனும் தரா. குடல் கெடுமே ஒழிய குறைநீங்காது சதைப்பயிற்சி கொடுத்தே தீர வேண்டும். நான் என்ன வரைந்தாலும் இந்த உண்மை சிலர் மூளைக்குள் புகாது. ‘ஸர்ஜரி’ யைப் ( SURGERY – ரணசிகிச்சை ) பற்றிய பெரிய வைத்திய புத்தகங்கள் கூட வயிற்றுச் சதைப்பயிற்சி செய்யத் திட்ட மிடுகின்றன.
ஆனால் வயிற்றுச்சுவர் ( சதைகள் ) பலவீனமடைந்தால் இந்நிலை தவறுகிறது. பூமி சக்தி கருவிகளையெல்லாம் கீழே இழுக்கின்றன. வயிற்று இறுக்கம் ( INTRA ABDOMINAL PRESSURE ) குறைகிறது. வயிற்றுச் சுவர் ( சதைகள் ) பூமி சக்தியைத் தடுப்பதுமின்றி, பெருங்குடலை வேலைக்குத் தூண்டுகிறது. இச்சதைகள் இளகவே மேற்கூறிய இறுக்கம் குறைகிறது. பெருங்குடலின் மேல் தூண்டுதலும் பலவீனப்படுகிறது. இரைப்பையும், குடல்களும் உப்புகின்றன.
ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து
நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள் நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்?
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.