நீ வெற்றி பெற்றால்
நீ வெற்றி பெற்றால் சாதனையாளன் பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லை..! சூழ்நிலை மாறும் போது.. சிலரது வார்த்தைகள் மாறும்.. பலரது முகங்கள் கூட மாறும்.. இதுவே நிதர்சனம்.

நீ வெற்றி பெற்றால் சாதனையாளன் பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லை..! சூழ்நிலை மாறும் போது.. சிலரது வார்த்தைகள் மாறும்.. பலரது முகங்கள் கூட மாறும்.. இதுவே நிதர்சனம்.
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்ட பின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ? இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன
ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே. தாயே நீ என் சிவபிரான் அளந்து தந்த இரண்டு படி நெல் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கி பிழைக்கும் படி தர்மம் செய்யும் உன்னையும் பாடி பின் செல்வர் செய்யும் தானங்களை கண்டு அவரையும் என்னை புகழ்ந்து பாட வைத்தாயே இதுவா உன்னுடைய உண்மையான…
ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே. ஆதியாக ஒன்றாய் இருந்து பல பல சக்திகளாய் விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றாலும் விலகி நிற்பவளே நீ என் சிந்தையினுள் நிற்பவளே நீ என் சிந்தையினுள் நீங்காமல் நிற்பது வியப்பல்லவோ இதை யார் அறிவார் என் தந்தையாகிய சிவபெருமானும் யோக துயிலில் உள்ள…
மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே. பல ஆயிரம் மின்னல்கள் உருவெடுத்து வந்தது போல் விளங்கும் கோலத்தை உடைய அபிராமவல்லி அடியவர்களின் நெஞ்சத்தில் இருக்கும் ஆனந்தமயமாக கொடி போன்றவள் அரிய வேதத்தின் முன் நடு கடையாகி முழுவதுமாய் இருப்பவன் இவளை உலகத்து உயிர்கள் போற்றி தொண்டு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. எவரிடமும் சென்று தன் இல்லாமையை சொல்லி இழிவு படும் நிலை எக்காலத்திலும் வராது. யாருக்கு என்றால் தாயை தியானிப்பவர்களுக்கு அது மட்டுமல்ல நித்தமும் தவம் செய்யாத இழி குணத்தோரிடம் செல்லாத நிலை வைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளுக்கு சரணம்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.