பல கனவுகளோடு
பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட

பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட
உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.
உபநிஷதங்களின் உபதேசத்திற்குறைவிடம் உண்மை. உண்மையாவது சூது இல்லாமையும் வாக்கிலும் மனதிலும் காயத்திலும் கபடமில்லாமையுமாகும்.
கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது, கனவில் கிடைத்த நல்லாசியால் காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது, ஆகையால் பொய்மையினின்றுங்கூட மெய்மை முளைக்கலாம் என்பது இதனால் அறியப்படும்.
மூன்று உலகங்களிலும் ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான். துக்கத்திற்காக அன்று, துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும். துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு, ஒன்று உடலில் நான் என்ற அபிமானம், இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது என்ற அபிமானம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.
தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள். உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.
ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது. நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள். யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள். அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.
ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தையும் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்கையில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒருபாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையமேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமேவேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் , துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.