உரையாடலின் ஒரு பகுதி 98
எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.

எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.
காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.
எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி. எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…
அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்
இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.
வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.
ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்
அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.
கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.
சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும். பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.