பழ மொழிகள் 2
கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
மலை இலக்கானால் குருடனும் எய்வான். சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. காட்டு விலங்கை வீட்டில் வளர்க்காதே. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.
அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது காம, குரோத, மோக, மத மாச்சர்யம், அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது. சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும் ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால் அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு அறிவேயல்ல என்பது…
இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம் அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது. அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது. இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல் பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.
நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…
எல்லாம் நம் மனதில் இருப்பதே அப்படி இருப்பதை வெளி கொணர உண்டான சாதனமே. மனம் புறம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அது ஆதவனாகட்டும் அல்லது அடுப்படி ஆகட்டும் ஆதவனின் உதயம் மனதிற்கு தரும் உணர்வு, அடுப்பு எனும் புறப்பொருள். நம் மனதிற்கு தரும் உணர்வு இரண்டும் ஒன்றா என்று யோசித்தால் இல்லையென்ற பதிலே வரும் அப்படியானால் அந்த புறப்பொருள் மூலம் நாம் அடைந்த உணர்வு அகத்தில் என்பது புரியும் அதில் கவனம் செலுத்தி பார்க்கும் போது காலப் போக்கில்…
அறிந்து கொள்வது அறிவெனப்படுவது அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம் அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது. அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம். ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை. புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.
சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம். மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது. இது புரிந்து கொள்ள முயலும் போது முரண்பாடாகவே தோன்றும் புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.
அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் இன்ப துன்பமென்ற ஆசிரியரிடம் கற்று அதன் வழியே குருவிடம் வரும் போது அனுபவத்தின் மூலம் நாம் அதை கண்டு உணர்ந்து கொள்ளலாம் வேறு வழி_ இருப்பதாக தெரியவில்லை. சரியாக சிந்தித்தால் இன்ப துன்பங்களால் உண்டான அனுபவபதிவே குண இயல்புகளாக மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.