உங்களின் அத்தனை வார்த்தைக்கும்
உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.

உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.
அன்பெல்லாம் வெறுப்பாகவும் அக்கறையெல்லாம் உதாசீனமாகவும்… உறவெல்லாம் துரோகமாகவும் மரியாதையெல்லாம் அவமானமாகவும்.. இருப்பேனென்ற வார்த்தையெல்லாம் ஏனிருக்க வேண்டும் என்று மாறும்.. மாறாது என்று நினைத்ததெல்லாம் கண்டிப்பாக ஒரு நாள் மாறும் எப்போது என்றும் தெரியாது ஏன் என்றும் தெரியாது அதனால் எப்போதும் தயாராய் இரு எதற்கும் தயாராய் இரு.
ஒரு சில வார்த்தைகள் ஒரு சில மௌனங்கள்.. ஒரு சில நிகழ்வுகள் ஒரு சில அனுபவங்கள்.. ஒரு சில ஞாபகங்கள் ஒரு சில மனிதர்கள்.. ஒரு சில பாடங்கள் ஒரு சில ஏமாற்றங்கள்.. ஒரு சில நேரங்களின் கண்ணீர் ஒரு சில நேரங்களின் புன்னகை.. இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே. தயிரை கடைதற்க்காக உள்ள மத்து சுழல்வது போல் எண்ணற்ற பிறவிகள் கடந்து அலைந்து திரிந்து சுழன்று உள்ள எனக்கு தாமரை மலரை இருக்கையாய் கொண்ட பிரம்மதேவனும் சந்திரனை தன் திருமுடியில் தாங்கிய சிவபெருமானும் பாம்பனை மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் செய்யும் அம்பிகையே வீடு பேற்றை தந்து…
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே, முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. செந்நிறம் கொண்ட சிந்தூரத்தின் வண்ண மேனியை கொண்ட அம்பிகையின் பொற்பாதங்கள் என் சிரத்தின் மேல் இருக்க என் மனதில் நிலை பெற்று இருப்பது அம்பிகையே உன் திருமந்திரம் உன்னையே தியானிக்கும் அடியார்களுடன் கூடி முறைபடி நான் உன் ஆகம பத்ததியை பாராயணம் செய்கிறேன்.
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால், வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே. மனதை ஞான நிலைக்கு எழுப்பும் மனோன்மணி தாயின் செப்பிற்கு உவமை சொல்லும்படியான இரு தனங்களும் அதன்பாரத்தால் வளைந்த இடையும் நீண்ட சடை உடைய ஈசன் உண்ட நஞ்சை தன் கைகளினால் தடுத்து நஞ்சை அமுதாக்கிய அம்பிகையின் மென் பாதங்களில் என் தலை இருக்கிறது.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…
துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.