விசேஷ திருக்கோலங்கள் 3
கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம். திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.

கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம். திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.
நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி வடிவில் படிக்கின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் சரஸ்வதி தேவியின் கையில் எப்போதும் வீணை இருக்கும். ஆனால் வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.
திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் மலை உச்சியில் சிவபெருமானும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் அருளும் முருகப்பெருமான் வேட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு வியர்வை துளிர்ப்பது விசேஷ அம்சம். செம்பொன்னார் கோயிலில் ஜடாமகுடத்துடனும், கரங்களில் அட்சமாலை ஏந்தியபடியும் தவக்கோலத்தில் அருள்கிறார் முருகன்.
உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் . ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதும் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என் அனுபவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத்தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?
எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே . சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு – இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்
ராகு 1ம் வீட்டில் நோயாளி மனைவி அமைவாள், 2ம் வீட்டில் இருதாரம் ஏற்படும். ராகு லக்னத்திற்கு 3,6,7,11ம் இடத்திலிருப்பது ராகுதிசை நடைபெறின் உயர்ந்த அந்தஸ்க்கு சென்ற பேரும் புகழும் ஏற்படுகிறது. ராகு, கேது ஏதாவது ஒரு கிரகம் செவ்வாயுடன் 6ம்பாவாதியோடு இருந்தால் விஷபயம் ஏற்படலாம். ராகு இருந்த வீட்டின் அதிபதியும், கேது இருந்த வீட்டின் அதிபதியும், ஒருவரின் கர்மாவை வெளிகொணரும் கிரகங்கள்.
ராகு, கேது கிரகங்கள் பாபருடன் எந்த ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்துள்ளாரோ அக்கிரக பலனை தனது திசையில் வழங்குவர். ராகுவிலிருந்து 5, 9ல் லக்னாதிபதியும், 9மிடத்தின் அதிபதியும் சேர்ந்து இருப்பின் லெளகீக வாழ்க்கையில் நாட்டம் இருக்காது. துறவி வாழ்க்கை வாழ்ந்து சன்னியாசியாக மாறிவிடுவர். ராகு 12ல் இருந்தால் கண்வியாதி வரும், சனி 12ல் இருந்தால் மாலை கண், அல்லது கண் சிமிட்டல் ஏற்படும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.