அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 54
வாத தோஷம் ….. வாத தோஷத்தில் தேகமானது தொட்டால் அளவாய் இருக்கும். பித்த தோஷம் ….. பித்த தோஷத்தில் தேகமானது தொட்டால் அதிக உஷ்ணமாயாவது அல்லது சீதளமாயாவது இருக்கும். கப தோஷ குணம் ….. கபரோகத்தில் தேகம் தொட்டால் குளிர்ச்சியாயும் சில்லிட்டு இருக்கும். துவந்த தோஷ குணம் ….. துவந்த தோஷத்தில் தேகமானது தொட்டால் இரண்டு தோஷ குணங்களை அல்லது சகல தோஷ குணங்களை பெற்று இருக்கும்.