சுந்தர யோக சிகிச்சை முறை 52
எங்கிருந்தாலும் தன்கடமையை இயற்றி, உடல் புலனிலேயே ஜீவனைப் புதைத்து விடாமல், உயர்மானிடப் புனிதத்தன்மையும் பற்றி, இயம நியம, ஆசனப் பிராணயாமக் கோட்டைக்குள் வாழ்பவனே யோகி. இவனிடம், மிதம், சமாதானம், ஹிதம், மூன்றும் காணப்படும். இவ்வாழ்க்கை மிக்க எளிது. நோயைத் தடுத்துச் சுகத்திலூன்றும் யோகி என்பவன் யார்? யோக வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் பரமாத்மா கீதையில் விளக்குகிறார் அந்த சுலோகங்களைக் கவனித்து இத்தொகுதியை முடிப்போம்.