மனிதன் இன்றைய கால கட்டத்தில் 14
நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.

நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.
இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது, விசித்திரமானது உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை. நாம் அன்பை புரிந்து கொண்டதில் தான் இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.
உண்மையில் அன்பு என்றால் என்ன கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு, கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம் இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம். பேசிக்கொண்டிருப்போம் ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால் நீங்கள் உங்களை அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள். நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம். போதிக்கிறோம் அது நல்லது என்றும் இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம் நாம் போசுகிறோம்.
நிலை இப்படி இருக்க சமுதாய மாறுதல், சமுதாய புரட்சி வேண்டும் என்று கேட்பதிலோ, கூக்குரல் இடுவதிலோ என்ன பயன் விளையகூடும் அதனால் தனிமனித மாறுதல் நிலையே சமுதாய மாறுதல் ஆகும். உறவை உறவாக புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம் மற்ற எந்த வழியும் இல்லை.
சில பல தேவைகள் ஆசைகளுக்காக உறவு என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு புரியும். எந்தவித உறவும் இல்லாமல் உறவோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தான் மனித குலத்தின் அறியாமை அல்லது மனித குலத்தின் சாபம் எதார்த்தமான அன்பும் இய்லபான நேசமும் இல்லாத நிலைகளில் உறவுகளை ஒவ்வொருவரும் கையாண்டு கொண்டிருக்கிறோம் இது தனிமனிதனில் தொடங்கி சமுதாயம் வரை பரவிவிட்டது
எப்படியென்றால் அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள் பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர். அந்த தனிமையே ஒவ்வொருவருக்கும் பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது. ஒரே வீட்டில் 10 பேர் உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும் ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர். இதில் உள்ள அர்த்தம் புரியும் போது நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்
நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது. ஒவ்வொருவரும் குடும்பங்களாக அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி, காதலன், காதலி என்று சார்ந்து இருந்து நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்
சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது. அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை. இதுவே வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும், அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.
ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது. அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால் தெரியும் விஷயம் இதுதான் அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை தருவது போல் தோன்றினாலும் அதன் அடியில் பயமே உள்ளது பயம் எப்போதும் நன்மையை செய்யாது.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.