கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 2
அறிவு வேறு உணர்வு வேறு உணர்வு என்பது ஒரு தளை. உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது. ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும். இதுதான் மாயை, கடவுள் நம்மைப் படைக்கிறார். நாம் கடவுளைப் படைக்கிறோம். இதுதான் மாயை. காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது. மரத்திலிருந்து விதை…