கல்யாண சுப்ரமணியர்
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம் 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும்