அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 61
கால பிரசம்ஸை ….. காலமானது சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது. தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.