ஒற்றுமை
இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..