அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 64
மேலும் காலமானது வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது. இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர வேறு கிடையாது. ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.