மனிதன் இன்றைய கால கட்டத்தில் 17
உயர்திரு. J.K. அன்பைப் பற்றி பேசும் போது இப்படி ஒரு வினாவை நம் முன் வைக்கிறார். அதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தினால் செலுத்தியிருந்தால் அவர்களை போருக்கு அனுப்புவீர்களா இது மட்டுமல்ல அவர் கேட்பது தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டு பொருளாதாரத்திற்காக ஒரு பணியில் அமரவும் ஒரு சில பரிட்சைகளில் தேறவும் மாத்திரம் கற்பித்து விட்டு இந்த அருமையான வாழ்க்கையின் மீதி பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடும் கல்வியை அவர்களுக்கு தருவீர்களா?